கேப்டன் பதவியில் இருந்து ஆம்லா திடீர் விலகல்

Hashim Amlaதென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிலிருந்து பிரபல வீரர் ஆம்லா திடீரென விலகியுள்ளதால் அந்நாட்டு அணி வீரர்களிடையே பெரும் பரபரப்பு ஏர்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் தென்னாப்பிரிக்க அணி தொடரை 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்திதது. இதையடுத்து தென்னாப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்ததால் ஆம்லாவுக்கு நெருக்கடி தொடர்ந்தது.

இந்த நிலையில் கேப்டவுனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது, இந்த போட்டி முடிவடைந்ததும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக ஆம்லா திடீரென அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது போன்ற முடிவை எடுப்பது எளிதானது அல்ல. ஆனால் நான் எனக்கு உண்மையாக இருக்க வேண்டி இருக்கிறது. இந்த முடிவை நான் தெளிவாகத்தான் எடுத்து இருக்கிறேன். எனது பேட்டிங்கில் நான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன். கேப்டன் பதவியை ஏற்றபோது உண்மையிலேயே அதை மிகப்பெரிய கெளவுரவமாக கருதினேன். அணியில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அடுத்து வரும் கேப்டனுக்கு எனது முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஆம்லாவின் விலகலை தொடர்ந்து பிரபல வீரர் டிவில்லியர்ஸ் அடுத்து நடைபெறும் போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Chennai Today News: South Africa captain Amla resigned

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *