shadow

விவாகரத்து செய்ய போவது உண்மைதான். செளந்தர்யா ரஜினி தகவல்

aswinநேற்று முதல் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று செளந்தர்யா தனது விவாகரத்து செய்தி உண்மைதான் என கூறியுள்ளார்.

கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது தங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம் இன்றும் இந்த விஷயத்தை இதற்கு மேல் ஊடகங்களும் மற்றவர்களும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply