shadow

soundarya-to-remake-rajinis-classic-nextசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்தை இயக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த், தனது அடுத்த  படம் குறித்த முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மூன்று முகம்’ திரைப்படத்தை அவர் ரீமேக் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவல் வதந்திதான் என்றும், அப்படி எந்த ஐடியாவும் தனக்கு இல்லை என்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் படங்கள் மட்டுமின்றி எந்த ஒரு படத்தையும் ரீமேக் செய்வது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருமுறை பார்த்து ரசித்த படத்தை மீண்டும் பார்க்க ரசிகர்கள் விரும்புவதில்லை. மேலும் எனது முதல் படம் என்பதால் என் தந்தையை வைத்து இயக்கினேன். எனது அடுத்த படத்தில் கண்டிப்பாக அவர் நடிக்க மாட்டார். புதுமுகங்களையோ அல்லது வேறு நடிகர்களையோ இயக்கி எனது திறமையை மீண்டும் நிரூபிப்பேன் என்று செளந்தர்யா மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply