கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மனைவி சந்தியா வயது (20). சந்தியா பிரசவத்துக்காக சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்படு இருந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சூளகிரியில் மின்வெட்டு இருந்தது. இதையடுத்து டாக்டர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சந்தியாவுக்கு பிரசவம் பார்த்தனர். சந்தியாவுக்கு அழகான குழந்தை பிறந்தது. சூளகிரியை சுற்றி பேரிகை, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி, உலகம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவம் பார்க்க சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர், யுபிஎஸ் போன்ற வசதிகள் இல்லாததால் மின்சாரம் நின்றுபோகும் நேரங்களில் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்வது சிக்கலாகி விடுகிறது. எனவே, சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர், யுபிஎஸ் போன்ற வசதிகள் செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply