சர்ச்சைக்குரிய விளம்பர பலகை
-அலகாபாத் பகுதியில் காங்கிரஸ் சார்பில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி படங்கள் இடம் பெற்றிருந்தன.
அந்தப் படங்களுக்கு கீழே, “அம்மாவுக்கு இப்போது அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. சகோதரருக்கு (ராகுல் காந்தி) பணிச்சுமை ஏற்கனவே அதிகமாக உள்ளது, பூல்பூரில் பிரியங்கா வேட்பாளர் ஆக வேண்டும். கட்சிக்கு பிரசாரம் செய்ய வேண்டும். 3-வது முறையாக காங்கிரஸ் அரசு அமைய உதவ வேண்டும்“ என கூறப்பட்டிருந்தது.
சோனியா காந்திக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போய் விடுவதால், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு போட்டியிட்ட பூல்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா களமிறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட காங்கிரஸ் சார்பில் விளம்பரப்பலகை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாநில தலைமை, இதற்கு காரணமான மாவட்ட கட்சி நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த விளம்பர பலகை எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிவில் லைன்ஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply