shadow

soniaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்ற நிலையில் இந்த தீர்ப்பில் பிழை இருக்கின்றது என்றும் எனவே இந்த தீர்ப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதால் மேல்முறையீடு குறித்து சோனியா காந்திதான் இறுதி முடிவு செய்வார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறுகையில், ”ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட செயலருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அதேபோல், சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடனும் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், அவரது அனுமதியின் பேரிலேயே இதுகுறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்கும் என்றும் அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply