shadow

விஜயதாரிணிக்கு சோனியா காந்தி பாராட்டு. இளங்கோவன் – குஷ்பு தரப்பு அதிர்ச்சி
vijayadharini
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் விஜயதாரிணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதாரிணி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலக தற்போது மறைந்த பொன்னம்மாளின் பேத்தி எம்.ஜான்சி ராணி புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயதாரிணி காங்கிரஸில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் டெல்லி சென்று சோனியாகாந்தியை நேரில் பார்த்து தனது தரப்பு விளக்கத்தை விஜயதாரிணி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது தொகுதியான விளவங்காடு பகுதியில் தான் மேற்கொண்ட பணிகள் குறித்தும் புகைப்பட ஆதாரங்களுடன் விஜயதாரிணி எடுத்துரைத்தார்.

விஜயதாரிணியின் விளக்கத்தை பொறுமையாக கேட்ட சோனியா காந்தி, ” ”நீ ஒரு போராளி. நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். ராகுல்காந்தியுடன் பேசி நல்ல முடிவு எடுக்கிறேன். அதுவரை தொகுதி பணியை கவனி” என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விஜயதாரிணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் குஷ்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Chennai Today News: Sonia Gandhi support to Vijayadharini

Leave a Reply