shadow

சோனியா காந்தி மீது ராகுல்காந்தி அதிருப்தியா? அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
sonia and rahul gandhi voted today
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக நீடிப்பார் என்று நேற்று டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதால் ராகுல்காந்தியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று கில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர்வரும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல், நாட்டின் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சில முக்கிய தலைவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் சோனியா காந்தியின் காங்கிரஸ் தலைவர் பதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து, இன்னும் ஓராண்டுக்கு சோனியா காந்தியே காங்கிரசின் தலைவராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு காரணமாக தனது அன்னையின் மீதும், கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் ராகுலாகாந்தி அதிருப்தி அடைந்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply