எந்நேரமும் ஹெட்போனுடன் திரிபவரா நீங்கள்? அப்படியானால் இதை படியுங்கள்

1Solution for girls who facing ear problemஒலியானது நமக்கே நமக்கு மட்டும் காதில் விழுந்தால் போதும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட கருவி தான் ஹெட்செட். காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ…ஹெட்செட் இருப்பது தான் இப்போதைய பெண்களின் லேட்டஸ்ட் டிரெண்ட்!

எங்கேயும், எப்போதும் ஹெட்போன் என இருக்கும் பெண்ணா நீங்கள்? அப்படி என்றால் இந்த தகவல்கள் உங்களுக்கு தான்.

செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும், அதனால் ஹெட் போனைப் பயன்படுத்துவது பெஸ்ட் தானே.. என்கிறார்களா? அதுவும் சரிதான்.

ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்னைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். எந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைப்பாடு ஏற்படும். அதிகமாக ஹெட்செட் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்’ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும், காதுக்குள் இரைச்சல் கேட்கும். மேலும் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும். சாலை விபத்துகளில் கணிசமான விபத்துக்கள் ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால்தான் நடக்கிறது.

தொடர்ச்சியாக ஹெட்செட் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பையும் நமைச்சலையும் தரும். அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி வரும். ஹெட்செட் பழக்கத்தினால் தற்போது இளவயதிலேயே கேட்கும் திறன் குறைப்பாடுகள் ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் காது கேட்காத மெஷின்களை இளம்வயதிலேயே பயன்படுத்த நேரும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதிகமாக ஹெட்செட் பயன்படுத்தினால் மன ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படுவதாக கூறும் மனநல ஆலோசகர் சுஹாசினி, ”ஹெட்செட் மாட்டிக்கொண்டே பணியில் ஈடுபடும்போது கவனம், நாம் செய்யும் வேலையில் இருக்காது. இதனால் வேலையை சரியாக செய்ய முடியாது. டிரைவிங், வாக்கிங் என எப்போதும் பாட்டுக்கேட்டுக்கொண்டே இருப்பதால், வேலையை மெதுவாகத்தான் செய்ய முடியும் அல்லது தவறாக செய்துவிடுவார்கள். இதனால் நேர விரையமும் சமயங்களில் பிரச்னைகள், விபத்துகளில் போயி முடிந்துவிடும். சிலர் ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அப்போது சாப்பாட்டில் அறவே கவனம் இருக்காது.

சுற்றி இருப்பவர்களுடன் விலகி வைக்க முக்கிய காரணம் ஹெட்போன். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டிய நேரங்களில் தவறவிடுவார்கள். சிலர் பிரச்னைகள் இருக்கும்போது, இசையை கேட்பது மன அழுத்ததை குறைக்கும் என நம்புகிறார்கள். உடனே ஹெட்செட்டை மாட்டிக்கொள்வார்கள். மீண்டும் அந்தப் பிரச்னை வெடிக்கும்போது அவர்களால் திடீரென முடிவெடுக்க முடியாமல் பெரிய மன அழுத்ததுக்கு உள்ளாகிறார்கள்.

சிந்திக்கும் திறன், நியாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’ என்ற மனநோய் வரும். இதனால் அவர்களுக்கு ஹெட்செட்டைக் கழட்டிய பிறகும் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும் இருக்கும்.

மன அழுத்தத்துக்கு இசையை கேட்பது தற்காலிக தீர்வு மட்டும் தான். ஒரு புத்துணர்வுக்காக மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டுமே தவிர, இதற்கே அடிமையாவது கூடுதல் பிரச்னையே தரும். தனிமையிலிருந்து தப்பிக்க சுற்றி உள்ளவர்களிடம் பழகுங்கள். பிரச்னைகள் மற்றவர்களிடம் சொல்லி புலம்புகள்.. மனபாரம் குறையும்.” என்றார் எச்சரிக்கையுடன்!

டேக் கேர் கேர்ள்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *