shadow

mohanமத்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகளை கூறும் பதவியும், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பதவிகள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆகிய பதவிகள். இந்த பதவிகளுக்கு மத்திய அரசுக்கு நம்பிக்கை மிகுந்த மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்யப்படுவது வழக்கம்.

கடந்த காங்கிரஸ் அரசால் நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதை அடுத்து அவர் தனது ராஜினாமாவை அறிவித்ததாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த விஷ்வநாதன், சித்தார்த் லூத்ரா ஆகியோர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுவரை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வந்த வாகன்வதியும் இன்று அல்லது நாளை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலியான மேற்கண்ட பதவிகளுக்கு மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, ஹரிஷ் சால்வே ஆகியோர் நியமிக்கப்படலாம் என்ற கருத்து டெல்லி வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply