shadow

sneha-croons-for-parthiban-700x388

பார்த்திபன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

ஆர்யா,அமலாபால்,விஷால் மற்றும் பலர் கெளரவ வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் புன்னகை அரசி சினேகா.

இந்த படத்தில் சினேகா நடிக்கவில்லை. முதன்முதலாக பாடகியாக அறிமுகமாகிறார். பார்த்திபனும், சினேகாவும் பாடும் இந்த பாடல் ஒலிப்பதிவு சமீபத்தில் சென்னையில் ஒலிப்பதிவு ஆனது.

பார்த்திபன் படத்தின் வசனங்களில் இரட்டை அர்த்தங்கள் வருவது போல பாடலிலும் இரட்டை அர்த்த வாசகங்கள் இடம்பெறும் என்பதால் இந்த பாடலை பாட சினேகாவுக்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் சினேகாவின் கணவரின் எதிர்ப்பை மீறி பார்த்திபனுடன் இணைந்து பாடலை பாடியதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இனிவரும் படங்களிலும், தொடர்ந்து சினேகா பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply