ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள S.N. என்ற மருத்துவக்கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளாக கண் வங்கி ஒன்று இயங்கிவருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து ஏராளமானோர் கண் தானம் செய்தும், கண்களை தானமாக பெற்றும் வந்துள்ளனர். இதனிடையே விஜயேந்திர ராஜ் மேத்தா என்பவர் இந்த கண் வங்கியில் இதுவரை எத்தனை கண்கள் தானமாக பெறப்பட்டது, எத்தனை கண்கள் கண்ணில்லாத நபர்களுக்கு பொருத்தப்பட்டது என்ற விபரத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த தகவல் ஆணையம், இதுவரையில் 1996ஆம் ஆண்டு முதல் 1805கண்கள் தானமாக பெறப்பட்டது என்றும், அவற்றில் 1063 கண்கள் விழியில்லாதவர்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. எனவே 742 கண்கள் வீணாக போனதாக அறிந்த விஜயேந்திரராஜ், இந்த தகவல்களை பத்திரிகைகளில் வெளியிட்டார்.

இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தானத்தில் சிறந்தது கண் தானம் என பொதுமக்கள் விரும்பி அளித்த கண்களை மருத்துவமனை நிர்வாகம், நிர்வாக குளறுபடியால் 742 கண்களை வீணடித்துள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி மாநிலத்தில் இயங்கிவரும் மேலும் 7 கண் வங்கிகளிலும் அதன் செயல்பாடு குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் S.N. மருத்துவவக்கல்லூரியின் முதல்வர் அளித்த விளக்கம் ஒன்றில் 742 கண்களும் பயன்படுத்த முடியாத அளவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது என்றும், அதன் காரணமாகவே பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *