shadow

smsசெய்தித்தாளில் தினமும் விபத்து செய்திகளை படித்தது போய், சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் விபத்தை சந்திப்பதோ, வேடிக்கை பார்ப்பதோ தினசரி நிகழ்வாகி விட்டது.

மது, கவனமின்மை, போக்குவரத்து நெரிசல் என காரணம் எதுவாய் இருப்பினும், விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக கிடைக்கும் மருத்துவ உதவியே அவரது உயிரைக் காப்பாற்றும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியம் தேவைப்படுவது ரத்தம்.

‘கோவையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஏ பாஸிட்டிவ் ரத்தம் தேவை’ என்பது போன்ற செய்திகள் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் நிமிடத்தில் நூறு பேருக்கு அக்கறையோடு ஃபார்வேர்டு செய்யப்படுகிறது. அதில் எத்தனை பேர் உதவ முன்வருகிறார்கள் என்பதில் தெளிவில்லை. ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து ரத்தம் கிடைக்கவும், உலக இளைஞர் அமைப்பான தேசிய இளையோர் பாசறை (JCI) ஒரு எஸ்.எம்.எஸ். திட்டத்தை தொடங்கியுள்ளது.

மொபைல் போனை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்களிடமிருந்து, இந்த திட்டத்தை தொடங்கியிருக்கிறது ‘JCI இந்தியா’. குறிப்பிட்ட எண்ணுக்கு SMS செய்வதன் மூலம், ரத்த தானம் செய்ய விரும்புவோர், தனது ரத்த வகையை பதிவு செய்து கொள்ளவும், ரத்தம் வேண்டுபவர் எந்த ரத்த வகை வேண்டுமோ அந்த ரத்த வகையை பதிவு செய்துள்ள நபரின் தொடர்பு எண்ணைப் பெறவும் வழிசெய்கிறது இந்த திட்டம்.

ரத்த தானம் செய்ய விரும்புவோர் 09791747474 என்ற எண்ணுக்கு, REG என்று டைப் செய்து அவரின் முகவரிக்கு உட்பட்ட STD கோடையும், அவரது ரத்த வகையையும் டைப் செய்து மெசேஜ் செய்யும் போது உடனேயே அவரது ரத்த வகை பதிவு செய்யப்பட்டு, பதில் அனுப்பப்படும்.

அதேபோல், ரத்தம் வேண்டுபவரும் மேல்சொன்னது போலவே அதே எண்ணுக்கு, REG என்று டைப் செய்ததற்கு பதில் GET ஸ்பேஸ் STD கோடு ஸ்பேஸ் என்ன ரத்த வகை என்பதையும் டைப் செய்து அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட அந்த STD கோடுக்கு உட்பட்ட மாவட்டத்தில் உள்ள ரத்த தானம் செய்ய விரும்பிய, JCI இந்தியாவில் பதிவு செய்துள்ள நண்பர்கள் அத்தனை பேரின் தொடர்பு என்னும் விண்ணப்பித்தவரின் மொபைல் எண்ணுக்கு மெஸேஜ் அனுப்பப்படும். ரத்ததானம் செய்ய விரும்பி பதிவு செய்தவர்களுக்கும், ரத்தம் தேவைப்படும் செய்தி உடனே அனுப்பப்படும்.

Leave a Reply