shadow

மாயமான விமானம் குறித்து துப்பு கிடைத்துள்ளது. மத்திய அமைச்சர் தகவல்

parrikar-an-32-missing-759சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று 29 பேர்களுடன் அந்தமானுக்கு கிளம்பி சென்ற ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கிளம்பிய 15 நிமிடங்களில் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் இரவு பகலாக ராணுவ வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் மாயமான இந்திய விமானப்படை விமானம் விழுந்திருக்கும் இடம் குறித்த துப்பு கிடைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் நேற்று இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், ‘‘மாயமான விமானம் குறித்த சிறிய துப்புகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். செயற்கைக்கோள் மூலமாகவும், நீர்மூழ்கி கப்பல் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள் மூலமாகவும் விமானத்தை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன’’ என்று கூறினார்.

மேலும் ஏஎன் 32 ரக விமானம் காலாவதியாகி விட்டதாக வெளியான தகவல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “அந்த விமானம் மிகவும் பாதுகாப்பான விமானம். கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 2 விபத்துகள் மட்டுமே நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சில சிறிய வகையிலான பழுதுகளால் தான் அப்போது விபத்தில் சிக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

Leave a Reply