‘ஸ்லீப் வித் மி’ தரமணி டீசரில் உள்ள தரமான வசனம்

இயக்குனர் ராம் இயக்கிய ‘தரமணி’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ போன்ற தரமான படங்களை இயக்கியவரின் அடுத்த படம்தான் இது.

ஐடி ஊழியர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டீசர், அவருடைய முந்தைய படங்களில் தரத்தில் வந்துள்ளதா? என்பதை சந்தேகப்படுத்தும் அளவுக்கு இந்த டீசரை டுவிட்டரில் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

அடுத்தவர் மனைவியின் போன் நம்பரை கொடுத்து டார்ச்சர் பண்ணுங்கள் என்று கூறுவது, கணவர்கள் எல்லாம் நாய்கள் தான், இதில் நல்ல நாய், கெட்ட நாய் என்பதே கிடையாது, கரெக்டா பிஸ்கட் போடனும் அவ்வளவுதான் என்று கூறுவது, ஸ்லீப் வித் மி என்ற வசனத்தை ஹீரோயினை பார்த்து கூறுவது ஆகியவை ராம் ரசனையை வெளிப்படுத்துகின்றன.

கணவனை நாய் என்று ஒரு பெண் அழைக்கிறார். ஆனால் இதை கிட்டத்தட்ட அனைத்து ஆண்களும் ஸ்போர்ட்டிவ் ஆகத்தான் எடுத்து கொண்டுள்ளனர். இதே வசனத்தை ஒரு கணவன், மனைவியை பார்த்து கூறியிருந்தால் இந்நேரம் பல பெண்கள் அமைப்புகள் வரிந்து கட்டி கொண்டு எதிர்ப்புகளை தெரிவிக்க கிளம்பியிருக்கும்.

டீசருக்கே இந்த பரபரப்பு என்றால் படம் வந்தால் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *