SK17 படத்தில் இணைந்த தல, தளபதி படங்களின் டெக்னீஷியன்!

தல அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை மற்றும் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63; ஆகிய இரண்டு படங்களுக்கும் போஸ்டர் டிசைன் செய்து வருபவர் பிரபல டிசைனர் கோபி பிரசன்னா.

இவர் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள SK17 திரைப்படத்திற்குபோஸ்டர் டிசைன் அமைக்கவுள்ளார். இந்த தகவலை கோபி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் விஷாலின் ‘அயோக்யா’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’, உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply