சிவகார்த்திகேயன் – பொன்ராம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களின் கூட்டணியான சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி ஆகியோர்களின் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் 34 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என்றும் அதனையடுத்து வெளிநாட்டு பாடல் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் 12வது படமான இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் பிரபல நடிகை சமந்தா ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *