shadow

ஆறுமணி நேரம் நடந்த விம்பிள்டன் போட்டி: உலகின் மிக நீளமான போட்டி என அறிவிப்பு

டென்னிஸ் போட்டிகள் சாதாரணமாக ஒன்று முதல் ஒன்றரை மணி நேரங்களில் முடிந்துவிடும் ஆனால் நேற்று லண்டனில் நடந்த ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்று ஆறு மணி நேரம் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்க்கு தகுதி பெற்றார் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன்

ஆண்டர்சன் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் அவரை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் ஜான் இஸ்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 6-7, 6-7 என கைப்பற்றினார்.

இறுதியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆண்டர்சன் நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன் பின்னர் நடந்த ஐந்தாவது சுற்று அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஆண்டர்சனும், இஸ்னரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்ட நேரம் கூடிக் கொண்டே போனது.
கடைசியாக, ஆண்டர்சன் 26-24 என்ற கணக்கில் இஸ்னரை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தார். இந்த அரையிறுதி போட்டி சுமார் ஆறரை மணி நேரம் நடந்து உலகின் மிக நீளமான போட்டி என்ற பெயரை பெற்றது

Leave a Reply