shadow

தேசப்பற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் ஷாருக்கான். சிவசேனா

sivasenaசமீபத்தில் ஷாருக்கான் அமெரிக்கா சென்றபோது அவரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் காக்க வைத்து அவமரியாதை செய்த விவகாரம் பெரும் பிரச்ச்னையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஷாருக்கான் தன்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்தும் அதை தவற விட்டுவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: “ஷாருக்கான் கடந்த 7 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் இந்தியாவுக்கு திரும்பியிருந்தால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டிருக்கும். அவர் பொறுமையை அமெரிக்கா சோதிக்கிறது.

அமெரிக்கா முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதியாகவே பார்க்கிறது. ஒருவேளை ஷாருக்கான் தனது பயணத்தை ரத்து செய்து தாயகம் திரும்பியிருந்தால் தேசப்பற்றை நிரூபித்ததோடு அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை ஷாருக்கான் தவறவிட்டுவிட்டார்’. இவ்வாறு அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply