shadow

sivasenaபாரத பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்து பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில் சீனாவை சிவசேனா கட்சி தலைவர் கடுமையாக தாக்கி பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவசேனா தனது அதிகாரபூர்வமான பத்திரிகையில் கூறியிருப்பதாவது: சீனாவுடனான கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் நமக்கு கசப்பாகத்தான் அமைந்துள்ளன. அதே போல் தான் இம்முறையும் நிகழ்ந்துள்ளது. ஒரு புறம் அந்நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்துவிட்டு, மறுபுறம் இந்திய வரைபடத்திலிருந்து காஷ்மீரையும், அருணாச்சல பிரதேசத்தையும் நீக்கி சீன தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. இதன் மூலம் ஒரு போதும் சீனா தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளாது என்பது தெளிவாக தெரிகிறது.

சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்திருந்தபோது, சீன வரைபடத்திலிருந்து திபெத்தை நீக்கியிருந்தால் அந்நாடு சும்மா இருந்திருக்குமா? இந்தியாவை வெறுப்பேற்றுவதற்காக பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு வழங்கி வருகிறது. அதன் காரணமாகவே அந்நாட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்கிறது. தீவிரவாதத்தை தவிர எதுவும் தெரியாத பாகிஸ்தான், அனைத்துக்கும் சீனாவை தான் எதிர்பார்க்கிறது.

1962-ல் நாம் இதுபோன்று அலட்சியமாக இருந்ததால் தான், லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை இந்தியா இழக்க நேர்ந்தது. அதே போல் தற்போது சியாச்சின் மீதும் சீனா கண் வைத்துள்ளது

இவ்வாறு சிவசேனா பத்திரிகையில் கட்டுரை வெளியாகியுள்ளது.

Leave a Reply