தயாரிப்பாளர் ஆகிவிட்டார் சிவகார்த்திகேயன்

அஜித், விஜய்க்கு அடுத்த இடத்திற்கு மிக குறுகிய காலத்தில் வளர்ந்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருப்பதால் விநியோகிஸ்தர்கள் இவரது படத்தை வாங்க போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன், தனது நண்பருக்காக தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பர் ‘நெருப்புடா’ புகழ் அருண்காமராஜ் என்பது தெரிந்ததே. அருண்காமராஜ் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. அப்பாவாக சத்யராஜூம், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள். திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *