shadow

சிவகார்த்திகேயனுடன் 3வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்

action-hero-Sivakarthikeyanஇயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ‘ரஜினிமுருகன்’ ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படவுள்ளதாக இயக்குனர் பொன்ராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆயுதபூஜை நாளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் எது? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பொன்ராம், சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை ‘ரெமோ’ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை வரும் 2017ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி படம் என்ற பெருமையை பெறுகிறது. இந்த படத்தின் நாயகி மிக விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், முதல் இரண்டு படங்களுக்கு இசையமைத்த டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply