shadow

சிவகார்த்திகேயனின் சீமராஜா ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ‘சீமராஜா’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு வெளியான சீமராஜா டைட்டில் தற்போது டுவிட்டர் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பொன்ராம் இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply