என்னோடு மீண்டும் ஜோடியாக நடிப்பாரா ஓவியா? சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன், தனது முதல் படமான ‘மெரினா’ படத்தின் நாயகியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியுமான ஓவியா குறித்து சமீபத்தில் டுவிட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடிய போது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘இன்று இருப்பது போலவே ‘மெரினா’ படத்தில் நடித்தபோதும் ஜாலியாகவும், கள்ளங்கபடம் இல்லாத அப்பாவியாக ஓவியா இருந்ததாகவும், இத்தனை வருடத்தில் அவரது குணம் மாறாமல் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஓவியாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘ஓவியா என்னுடன் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என்று கூறினார். ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் ‘சங்கமித்ரா’ படத்தின் நாயகியாக ஓவியாவை ஒப்பந்தம் செய்யவும் பரிசீலனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *