shadow

விஷால் படத்திற்கு சிவாஜி பட டைட்டில்

vishalவிஷால் நடித்து வரும் ‘கத்திச்சண்டை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியபோகிறது. இந்த படத்தை அடுத்து அவர் மிஷ்கின் இயக்கவுள்ள துப்பறிவாளன்’ படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி 2’ என பிசி ஷெட்யூலில் உள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது

இந்த படத்தை இயக்குபவர் விஷாலின் நெருங்கிய நண்பர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘இரும்புத்திரை’ என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 1960ஆம் ஆண்டு ‘இரும்புத்திரை’ என்ற டைட்டிலில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, வைஜெயந்திமாலா, எஸ்.வி.ரங்காராவ் நடித்த படம் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply