shadow

cb93fbe4-920c-4b58-bf01-f8e05a579e63_S_secvpf

தேவையான பொருள்கள் :

சிறுகிழங்கு – 300 கிராம் 
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி 
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி 
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி 
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி 
பெரிய வெங்காயம் – 1 
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* சிறுகிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.  

* வெங்காயத்தை பொடியாக வெட்டி வைக்கவும்.  

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  

* வெங்காயம் பொன்னிறமானதும் கலந்து வைத்துள்ள சிறுகிழங்கு துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். சிறு தீயில் மூடி வைத்து வேகவைக்கவும். பாதியளவு வெந்தவுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.  

* வெந்ததும் இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.  

* சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.  

Leave a Reply