சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இந்தியர்களால் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு 15 வாரங்கள் சிறைதண்டனை அளித்து சிங்கப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பரில் பயங்கர கலவரம் ஏற்பட்டு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 15 பேர் வரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பொதுசொத்துக்களுக்கு சேதம் உண்டாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சின்னப்ப விஜயரகுநாத பூபதிக்கு முதலில் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சட்ட வல்லுனர்கள் அவருடைய தண்டனையை குறைக்கும்படி பரிந்துரை செய்ததால், நேற்று அவருடைய தண்டனை 15 வாரங்களாக குறைக்கப்பட்டது. மற்றவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave a Reply