shadow

மீண்டும் தள்ளிப்போனது ‘சிங்கம் 3’. ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய ‘எஸ் 3’ என்ற சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரூபாய் நோட்டு பிரச்சனை, புயல் உள்பட பல்வேறு பிரச்சனை காரணமாக இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் பொங்கல் தினத்தில் விஜய்யின் ‘பைரவா’ உள்பட பல படங்கள் ரிலீஸ் ஆவதால் தற்போது மீண்டும் ‘சிங்கம் 3’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Leave a Reply