shadow

வெள்ளி வென்ற சிந்துவுக்கு ரூ.50 கோடி. தங்கம் வென்ற மாரியப்பனுக்கு 2.5 கோடியா?

olympicசமீபத்தில் நடந்து முடிந்து ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் பெற்ற பி.வி.சிந்துவை அவரது சொந்த மாநிலம் மட்டுமின்றி இந்தியாவே தூக்கி வைத்து கொண்டாடியது. சச்சின் தெண்டுல்கர் பிஎம்டபிள்யூ கார் கொடுத்தார். தற்போது விளம்பர நிறுவனங்களில் நடிக்க மூன்று வருடங்களுக்கு ரூ.50 கோடி பெற்று ஒப்பந்தமாகியுள்ளார் சிந்து. பி.வி.சிந்துவுக்கு இந்த ஒரே ஒரு வெள்ளி பதக்கத்தால் கிடைத்த பணம் கிட்டத்தட்ட ரூ.100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு நிகரான பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை எந்த தனியார் நிறுவனமும், விஐபிகளும் கண்டுகொள்ள வில்லை. தமிழக அரசு ரூ.2 கோடியும், மத்திய அரசு ரூ.75 கோடியும் கொடுத்ததோடு சரி. இவ்வளவுக்கு மாரியப்பன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார்.

இவராவது பரவாயில்லை. ஒலிம்பிக் போட்டிக்காக பல வருடங்கள் கஷ்டப்பட்டு பங்கு பெற்ற லலிதா பாபர், ஜெய்சா , ராணுவ வீரர் கணபதி ஆகியோர் பதக்கம் பெறவில்லை என்றாலும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதில் ஜெய்சா, தனக்கு தண்ணீர் கொடுக்க கூட ஒருவரும் வரவில்லை என்று கூறி கதறி அழுதார்.

பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு மட்டும் கோடி கோடியாய் கொட்டி கொடுக்கும் நிறுவனங்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட மற்ற வீரர்களை கண்டு கொள்வதே இல்லை. ஏன் அரசு கூட கண்டு கொள்வதில்லை. அதேபோல் பதக்கம் வெல்லும் பெண்களுக்கு மட்டுமே கோடிக்கணக்கில் கொட்டி தர பல நிறுவனங்கள் தயாராக உள்ளது. மாரியப்பன் போன்றவர்கள் தங்கப்பதக்கத்தை வீட்டில் வைத்து அழகு பார்த்து கொண்டே இருக்க வேண்டியதுதான்

வெற்றியோ தோல்வியோ எல்லாரையும் சமமாக நடத்துங்கள். தோல்வி அடைந்திருந்தாலும் ஒலிம்பிக்கில் பங்குபெற்றவர்களைக் கொண்டாடுங்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை.. மதிப்பிடமுடியாதது என உணருங்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச தடகள வீரர் -வீராங்கனைகளை அடையாளம் தெரியாமலேயே செய்து விடாதீர்கள்!

Leave a Reply