shadow

ஜோக்கர் குருசோமசுந்தரத்தின் அடுத்த படத்தில் சிம்ரன் கணவர்

1சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ராஜூமுருகனின் ‘ஜோக்கர். இந்த படத்தின் நாயகனாக நடித்த குரு சோமசுந்தரம் நடித்த அடுத்த படம் ‘ஓடு ராஜா ஓடு’. ‘ஜோக்கர்’ படத்திற்கு முன்பே இந்த படம் உருவாகிய போதிலும், ‘ஜோக்கர்’ படத்தின் வெற்றியால் தற்போது இந்த படம் தூசி தட்டப்பட்டு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் குரு சோமசுந்தரத்துடன் சாருஹாசன், நாசர், ஆனந்த்சாமி, லட்சுமி பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் வில்லனாக சிம்ரனின் கணவர் தீபக் அறிமுகமாகிறார். நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு டோஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார்

டார்க் காமெடி பட பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக இயக்குனர்கள் நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply