shadow

images

  • மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நொடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
  • பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.
  • வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுப்பிசுப்பாக ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக் கொண்டு நறுக்க வேண்டும்.
  • தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு, மொருவன இருக்கும்.
  • எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரியாக சுவையாக இருக்கும்.
  • உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனால் உருளைக் கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
  • தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
  • நெய்யை காய்ச்சி இறக்கும் போது அரை தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.
  • கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து சமைக்க வேண்டும்.
  • குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால் அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சு கொள்ளும்.

Leave a Reply