அடுத்த வாரம் சிம்புவின் அடுத்த ரிலீஸ். ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து அவர் சினிமாவில் இருந்தே விலக்கப்படுவார் என்ரு கூறப்பட்டது. ஆனால் சிம்புவின் அடுத்த ரிலீஸ் அடுத்த வாரம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிம்பு தற்போது சந்தானம் நடித்து வரும் ‘சக்க போடு போடு ராஜா’ என்ற திரைப்படத்திர்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் சிங்கிள் பாடல் தான் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ளதாகம். இதுகுறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சிம்புவின் படங்கள் வரிசையாக தோல்வி அடைவதால் அவர் இசையமைப்பு, இயக்கம் என வேறு துறைகளுக்கு மாறவுள்ளதாகவும், ‘சக்க போடு போடு ராஜா’ பாடல்கள் ஹிட்டானால் அவர் முழு நேர இசையமைப்பாளராக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *