shadow

ரஜினி, அஜித் படங்களின் அடுத்த பாகத்தில் சிம்பு
billa
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘பில்லா’ படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடித்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாகத்தில் அஜித் விரைவில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அஜித் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் பிசியாக இருப்பதால் ‘பில்லா 3’ படத்தில் தற்போதைக்கு நடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ‘பில்லா படத்தின் மூன்றாவது பாகத்தை பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாகவும் அதில் அஜித்துக்கு பதிலாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் ‘பில்லா 2018’ படத்தை நான் இயக்க ரெடி, யுவன் இசையமைக்க ரெடி, நீங்கள் நடிக்க ரெடியா? என்று சிம்புவிடம் கேள்வி கேட்க அதற்கு சிம்பு ‘பொறந்ததில் இருந்தே நான் ரெடி’ என்று பதில் கூறியுள்ளார்.

விரைவில் இதுகுறித்து சிம்பு மற்றும் வெங்கட்பிரபு நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply