காசி தியேட்டரில் சிம்பு. திருவிழாக் கோலமான தியேட்டர்

simbu 1சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் இன்று தமிழகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சென்னை காசி தியேட்டரில் இந்த படத்தின் ரிலீஸை ஒரு திருவிழா போல சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை முதலே காசி தியேட்டரின் முன் ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். மேளதாளம், ஆட்டம்-பாட்டம், பட்டாசு என அந்த இடமே திருவிழாக்கோலம் போல காட்சி அளித்து வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கும் 8மணிக்கும் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்ததால் சிம்பு ரசிகர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர். ஆனால் அவர்களை சமாதானப்படுத்துவதுபோல் இன்று காலை சரியாக பத்து மணிக்கு சிம்பு, காசி தியேட்டருக்கு வந்தார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் சிம்புவை பார்க்கவும், அவருக்கு கைகொடுக்கவும் முந்தியடித்தனர். அனைவருக்கும் நன்றி கூறிய சிம்பு, பின்னர் ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்த்து வருகிறார்.

படத்தின் டைட்டிலுக்கு முன்பு ‘இளையதளபதி விஜய்’க்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் தொடங்கியுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *