vijay and simbuஇளையதளபதி விஜய் நடித்துள்ள புலி’ படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என இயக்குனர் சிம்புதேவன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். உடனே டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் விஜய்யின் புலி படம் குறித்த ஹேஷ்டேக் உருவாகி அதனை இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி விஜய் ரசிகர்களுக்கு சிறிதுநேரம் கூட நீடிக்கவில்லை. புலி பர்ஸ்ட் லுக் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் சிம்பு நடித்து வரும் ‘கான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியானது. உடனடியாக களத்தில் இறங்கிய அஜீத் ரசிகர்கள் இந்த செய்தியை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். சிம்பு அஜீத்தின் வெறித்தனமான ரசிகர் என்பதால், சிம்புவின் பர்ஸ்ட் லுக்கை அஜீத் ரசிகர்கள் டிரெண்டிற்கு கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் ‘புலி’ படத்திற்காக விஜய் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக்கை சிம்புவின் ‘கான்’ ஹேஷ்டேக் முந்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, டாப்சி, கேதரின் தெரசா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *