Simbu_Dhanushதனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்‘காக்கா முட்டை’. இப்படத்தை வெற்றிமாறானின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அனைவரின் பாராட்டுத்தல்களையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு கெளரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐந்து நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சியில், சிம்புவின் தீவிர ரசிகர்களாக இருக்கும் குழந்தைகளிடம் சிம்பு கைகுலுக்குவது போன்ற காட்சியை படமாக்கவிருக்கிறார்கள். இதற்காக சிம்பு அரை நாள் ஒதுக்கி நடித்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

‘காக்கா முட்டை’ படம் இந்த வருட இறுதியில் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மிக விரைவில் அறிவிக்க இருப்பதாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *