ஒரே மாதத்தில் முழு படத்தையும் முடித்த சிம்பு. ஆச்சரியத்தில் கோலிவுட்

சிம்பு படம் என்றாலே தாமதம் என்று இன்னொரு பெயர் உண்டு. சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருபவர் என்றும் இதனால் குறித்த நேரத்தில் படங்களை முடிக்க முடியாது என்றும் அதனால் தயாரிப்பு செலவு எகிறி படம் வெளியாகும் நேரத்தில் பல வழக்குகளையும் சந்தித்து வருவது என்றும்தான் இதுவரையிலான வரலாறு

இந்நிலையில் சிம்பு ஒரு படத்தை ஒரே மாதத்தில் முடித்துவிட்டாராம். ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆனால் அவர் முடித்தது நடிப்பை அல்ல, இசையை..ஆம், சந்தானம் நடிக்கவுள்ள ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளர் ஆகிறார்.

இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் ரிகார்டிங்கும் முடிந்துவிடும் என்றும் சிம்பு தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த வேகத்தை நடிப்பிலும் காண்பித்தால் நல்லது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *