தொலைக்காட்சி ஜோடிக்கு வாழ்த்து கூறிய சிம்பு!

சின்னத்திரை நட்சத்திர ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வீடியோகால் மூலம் நடிகர் சிம்பு வாழ்த்து கூறினார்.

சின்னத்திரை நட்சத்திரங்களான மதன் மற்றும் ரேஷ்மா ஆகிய இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிலையில் மதன் – ரேஷ்மா ஜோடிக்கு வீடியோகால் மூலம் சிம்பு வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.