shadow

சிம்பு-விஷால் மீண்டும் மோதல். வெற்றி பெறுவது யார்?
simbu
நடிகர் சங்கம் சமீபத்தில் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டை ‘ஜோக்கர்களின் விளையாட்டு’ என்று சிம்பு விமர்சனம் செய்ததும் அதற்கு விஷால் பதிலடி கொடுத்ததுமான செய்திகள் பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் வணிக ரீதியாகவும் நேருக்கு நேர் மோத முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இயக்குனர் பாண்டியராஜ் இயகக்த்தில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் இந்த படம் வரும் மே 20ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதே மே 20ஆம் தேதி விஷால் நடித்த ‘மருது’ திரைப்படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘மருது’ படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் ‘மருது’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக சிம்பு சமீபத்தில் அறிவித்ததும் அதற்கு விஷால் கூறிய பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிம்பு படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் விஷால் படமும் வெளியாகும் என்று வெளிவந்துள்ள செய்தியால் இருவருக்கும் இடையே உள்ள விரிசல் பெரிதாகி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply