shadow

காதலர் தினத்தில் சிம்பு- நயன்தாரா படம் வெளியீடு
simbu
சிம்பு, நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்து நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பெற்றுள்ளதால் இப்படத்தை வரும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதற்குள் மீதியுள்ள ஒரு பாடலை எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், வரும் ஜனவரிக்குள் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஒரே மாதத்தில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜ், தற்போது விஷாலின் ‘கதகளி’ படத்தில் பிசியாக இருப்பதால், அந்த படத்தின் பணிகளை முடித்தவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஒரு பாடலை எடுத்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த பாடலில் சிம்பு மற்றும் ஆண்ட்ரியா நடனம் ஆடவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

English Summary: Simbu and Nayanthara movie released at Valentine’s Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *