shadow

அஜித்தின் ‘வரலாறு’ ரீமேக்கில் சிம்பு?

varalaruகவுதம்மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை அடுத்து சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிம்பு இந்த அப்பா மற்றும் அவருடைய டுவின்ஸ் மகன்கள் என மூன்றுவிதமான கெட்டப்பில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்த ‘வரலாறு’ படத்திலும் அஜித், அப்பா மற்றும் டுவின்ஸ் மகன்கள் என நடித்திருந்ததால், இந்த படம் ‘வரலாறு’ படத்தின் ரீமேக் என்று ஒருசில கதைகட்டி விட்டுள்ளனர். இந்த வதந்தையை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது என்றும் ‘வரலாறு’ படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் சிம்பு, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply