அரசர் வேடத்தில் சிம்பு: வைரலாகும் புகைப்படங்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு குறித்த அப்டேட்கள் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது ஹன்சிகாவுடன் ’மஹா’ என்ற படத்தில் நடித்து வரும் சிம்பு, அந்த படத்தை முடித்ததை அடுத்து தற்போது விளம்பர படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த விளம்பரப் படத்தில் அவர் ராஜாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நேற்று வெளியான புகைப்படங்களில் மாதவன் மற்றும் சமந்தா ராஜா, ராணி வேடத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது சிம்புவும் ராஜா படத்தில் நடித்து வரும் விளம்பர படத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply