குளிர்காலம் ஆரம்பித்து விட்டாலே சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இத்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது.

தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கி விடும்.

அதனைத் தொடர்ந்து சுடுநீரில் குளிக்கும் போது, அதில் சிறிது ரோஸ் எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து குளித்தால், பாத வறட்சியுடன், சருமத்தில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கலாம். மேலும் இதனால் சருமம் பொலிவோடு பட்டுப் போன்று இருக்கும்.

பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, நன்கு துணியால் துடைத்துவிட வேண்டும். பின் எலுமிச்சை துண்டை எடுத்து சர்க்கரையில் தொட்டு, பிறகு பாதங்களை தேய்த்தால், பாதங்களில் உள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடும். மேற்கூறிய முறையை செய்த பின்னர் தவறாமல் வெதுவெதுப்பான நீரால் பாதங்களை மீண்டும் அலச வேண்டும். இதனால் அது பாதங்களை பொலிவோடும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பின்பு தவறாமல் சிறிது ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி, லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும 2 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து, பாதங்களில் தடவி சிறது நேரம் ஸ்கரப் செய்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் வெளியேறிவிடும். அதிலும் இதில் சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தினால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply