shadow

11 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பீச்சில் டூயட் பாடும் காதல் ஜோடி

aranmanai2கடந்த 2004ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து என்ற படத்தில் சித்தார்த் மற்றும் த்ரிஷா ஆகிய இருவருக்கும் ‘நீ எங்கே..என்ற பீச் பாடல் ஒன்று இருந்தது. சரியாக 11 வருடங்கள் கழித்து இதே ஜோடிக்கு மீண்டும் ஒரு பீச் பாடலின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தாய்லாந்து நாட்டில் உள்ள ‘க்ரபா’ என்ற பீச் பகுதியில் ‘அரண்மனை 2’ என்ற படத்திற்காக ஒரு பீச் பாடலின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். த்ரில் மற்றும் பேப்படமான ‘அரண்மனை 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயற்கை எழில் சூழ்ந்த ‘க்ரபா’ கடற்கரை பகுதியில் நடைபெற்று வரும் இந்த பாடலின் படப்பிடிப்பு இவ்வாரம் முழுவதும் நடைபெறும் என்றும் பின்னர் சென்னை திரும்பவுள்ள படக்குழுவினர் ஹன்சிகாவின் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.

English Summary: Siddharth and Trisha duet song after 11 years

Leave a Reply