shadow

கமல் கெட்டப்ப்பில் சிபிராஜ்

கடந்த 1988ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் அவர் தாடியுடன் கூடிய வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த கெட்டப் அந்த நேரத்தில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அதே கெட்டப்புடன் சிபிராஜ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு அதே டைட்டிலான ‘சத்யா’ என்றே வைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு அம்சமாகும்

சைத்தான்’ இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும், இன்னொரு முக்கிய வேடத்தில் வரலட்சுமியும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் சதீஷ், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். சைமன் இசையமைக்கும் இந்த படத்தை சிபிராஜின் தந்தை சத்யராஜ் தயாரிக்கின்றார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று காலை வெளியானது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கிற்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply