அதிர்ச்சி தகவல். சியாச் பனிச்சரிவில் சிக்கி உயிரோடு மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா மரணம்.
hanumandhappa
கடந்த வாரம் சியாச் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 10 பேர் பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா 6 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ஹனுமந்தப்பா, ராணுவ மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் குழு போராடியது.

இந்நிலையில் சிகிச்சையின் பலனின்றி சற்று முன்னர் ஹனுமந்தப்பா மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 6 நாட்கள் எமனிடம் போராடி உயிர் பிழைத்த ஹனுமந்தப்பா மருத்துவமனையில் மரணம் அடைந்ததாக வந்துள்ள செய்தி ஒவ்வொரு இந்தியனையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

Chennai Today News: Siachen avalanche: Lance Naik Hanumanthappa dead, say doctors

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *