shadow

7am-arivu-surya-shruti-hassan-movie-stills-33_720_southdreamz

ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு பின்னர் சூர்யாவுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஸ்ருதிஹாசன் தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதிஹாசன் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆயினும் அந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் நடிப்பு குறித்து நல்ல விமர்சனங்கள் வந்தன. அஞ்சான் படத்தை அடுத்து சூர்யா, வெங்கட்பிரபுவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் வெங்கட்பிரபு அணுகியபோது, ஸ்ருதிஹாசன் பாசிட்டிவ்வான பதிலை தரவில்லை என்று கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் மட்டும் ஸ்ருதிஹாசனுக்கு மொத்தம் 7 படங்கள் புக் ஆகியுள்ளது. அதில் விஷால் நடிக்கும் பூஜை படமும் ஒன்று. கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல்ஹாசன் மகளாக நடிப்பதற்கே அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் சூர்யாவின் படத்தில் நடிக்க தன்னிடம் தேதி இல்லை என்று வெங்கட்பிரபுவிடம் கூறிவிட்டதாக தெரிகிறது.

இந்த கேரக்டருக்கு ஸ்ருதிஹாசன் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால்தான் அவரை அணுகினோம். ஆனால் அவரிடம் இருந்து இன்னும் உறுதியான தகவல்கள் வரவில்லை. எனினும் தொடர்ந்து அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்வோம் என வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

Leave a Reply