shruti-haasan-nayantharaஎன்னை அறிந்தால்” என்ற மாபெரும் ஹிட் கொடுத்த கையோடு குட்டித்தல’யை பெற்றெடுத்த அஜீத், மிகுந்த சந்தோஷத்துடன் தனது அடுத்த படத்தினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘தல 56’ என்னும் இந்த புதிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் தற்போது அஜீத் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது அவருடைய ரசிகர்களுக்கு கிடைத்துள்ள இனிப்பான செய்தியாகும்.

மேலும் ‘தல 56’ படத்தின் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் அல்லது நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், வரும் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்தின் தோற்றம், மற்றும் கேரக்டர் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கும் என சிறுத்தை சிவா ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *