shadow

shruti-haasan-read

தனுஷின் 3 படத்திற்கு பின்னர் ஸ்ருதிஹாசனுக்கு பல தமிழ்ப்படங்கள் வாய்ப்புகள் வந்தது. ஆனால் ஸ்ருதி ஹாசன் தமிழ்ப்படத்தில் இனி நடிக்க மாட்டார் என்றும், தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு மட்டுமே கால்ஷிட் கொடுப்பார் என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பொய்யான தகவல்கள் பரவியதால், அடுத்தடுத்து வந்த தமிழ்ப்படங்களின் வாய்ப்புகளை ஸ்ருதிஹாசன் இழந்தார். தற்போது இந்த பொய் அறிவிப்புகளுக்கு காரணமே தன்னுடைய மேனேஜர்தான் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

இதனால் அதிரடி நடவடிக்கையாக தனது இரண்டு மேனேஜர்களையும் டிஸ்மிஸ் செய்துவிட்டார் ஸ்ருதிஹாசன். தமிழ் மற்றும் தெலுங்கு கால்ஷீட்டுக்களை இவர்கள் இருவரும் இதுநாள் வரை கவனித்து வந்தனர். இவர்கள் பரப்பிய வதந்தியால்தான் ஸ்ருதிக்கு வரவேண்டிய தமிழ் வாய்ப்புகள் அனைத்தும் மற்ற நடிகைகளுக்கு கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் நீக்கிய உடனே விஷாலுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஸ்ருதிஹாசன். தற்போது ஷோபா என்று பெண் மேனேஜரை ஸ்ருதிஹாசன் பணியில் அமர்த்தியுள்ளார். அவருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என கூறப்படுகிறது.

புதிய மேனேஜரின் வரவால், இனி அடிக்கடி ஸ்ருதிஹாசன் கோலிவுட் படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply