shadow

surya and shruthiவெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள ‘மாஸ்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ள நிலையில், சூர்யா தற்போது ’24’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மனம்’ படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கி முடிக்க விக்ரம்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படமான ‘சிங்கம் 3’ படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சிங்கம், சிங்கம் 2 படங்களை இயக்கிய ஹரி இயக்கவுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ருதிஹாசன் ஏற்கனவே சூர்யாவுடன் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘சிங்கம் 3’ படத்தில் இசையமைக்க இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் படத்தை வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய ஹரி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் ‘புலி, அஜீத்துடன் ‘தல 56’, மகேஷ்பாபுவுடன் ஒரு தெலுங்கு படம் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அவர் மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply